Posts

Showing posts from January, 2024

மாணவர் கதைகள்

 நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு நாம கேட்க போறது நண்பர்கள் வாங்க கதை கேட்கலாம் .... ஒருமுறை சாக்ரடீஸ் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாரு. அப்போ அவர பாக்க ஒருத்தர் வந்தாரு. வந்துட்டு சாக்ரடீஸ்சோட நண்பர பற்றி ஏதோ குறை சொல்ல முயன்றாரு. உடனே சாக்ரடீஸ் அவர் கிட்ட கேட்கிறார. என்னோட நண்பரை பற்றி என்கிட்ட ஏதோ சொல்ல விரும்புறீங்க அப்படின்னா அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட ஒரு  மூன்று கேள்விகளை கேட்பேன் மூன்று கேள்விகளுக்கும் ஆம் என்று மட்டுமே பதில் இருக்கணும்.அப்படி இருந்தது அப்படின்னா நீங்க அவரைப்பற்றி  தாராளமா என்கிட்ட சொல்லலாம் அப்படின்னு சொன்னாரு. என்ன அந்த மூன்று கேள்வி அப்படின்னு வந்தவரு கேட்கிறாரு. சாக்ரடீஸ் வரிசையா கேள்விகளை கேட்க ஆரம்பிக்கிறார். 1. என் நண்பர் செய்த செயல நேரடியா பாத்துட்டு தான் என்கிட்ட வந்து சொல்றீங்களா அப்படின்னு கேக்குறாரு முதல் கேள்விய. இல்லை அப்படின்னு வந்தவர் பதில் சொல்றாரு. இரண்டாவது,அவரைப் பற்றிய நல்ல விஷயங்கள் சொல்லப் போறீங்களா  வந்தவர் இல்ல அப்படின்னு சொல்றாரு. மூன்றாவது அந்த நண்பரைப் பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா ,அந்த நண்பரைப் பற்றி பேசுவதனால் யாருக