மாணவர் கதைகள்
நண்பர்கள்
அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு நாம கேட்க போறது நண்பர்கள் வாங்க கதை கேட்கலாம் ....
ஒருமுறை சாக்ரடீஸ் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாரு. அப்போ அவர பாக்க ஒருத்தர் வந்தாரு. வந்துட்டு சாக்ரடீஸ்சோட நண்பர பற்றி ஏதோ குறை சொல்ல முயன்றாரு. உடனே சாக்ரடீஸ் அவர் கிட்ட கேட்கிறார. என்னோட நண்பரை பற்றி என்கிட்ட ஏதோ சொல்ல விரும்புறீங்க அப்படின்னா அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட ஒரு மூன்று கேள்விகளை கேட்பேன் மூன்று கேள்விகளுக்கும் ஆம் என்று மட்டுமே பதில் இருக்கணும்.அப்படி இருந்தது அப்படின்னா நீங்க அவரைப்பற்றி தாராளமா என்கிட்ட சொல்லலாம் அப்படின்னு சொன்னாரு. என்ன அந்த மூன்று கேள்வி அப்படின்னு வந்தவரு கேட்கிறாரு. சாக்ரடீஸ் வரிசையா கேள்விகளை கேட்க ஆரம்பிக்கிறார்.
1. என் நண்பர் செய்த செயல நேரடியா பாத்துட்டு தான் என்கிட்ட வந்து சொல்றீங்களா அப்படின்னு கேக்குறாரு முதல் கேள்விய. இல்லை அப்படின்னு வந்தவர் பதில் சொல்றாரு.
இரண்டாவது,அவரைப் பற்றிய நல்ல விஷயங்கள் சொல்லப் போறீங்களா
வந்தவர் இல்ல அப்படின்னு சொல்றாரு. மூன்றாவது அந்த
நண்பரைப் பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா ,அந்த நண்பரைப் பற்றி பேசுவதனால் யாருக்காவது பயன் இருக்கா அதற்கும் இல்லை அப்படின்னு பதில் வந்தது. யாருக்கும் பயனில்லாத,நல்ல விஷயமும் இல்லாத, நேரடியா நீங்க பாக்காத என்னோட நண்பர பற்றிய செய்திய தயவு செய்து என்கிட்ட சொல்லாதீங்க அப்படின்னாரு. நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களை மட்டுமே மேற்கொள்ளும். நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப்பட்ட பலூன் போன்றவர்கள். நீங்க விட்டுடீங்கன்னா எங்கேயோ பறந்து போயிடுவாங்க. பத்திரமா உலகத்துல சிறு தவறுகள் கூட செய்யாதவர்கள் எவருமே இல்லவே இல்லை. அதுமட்டுமில்லாம மன்னிக்க முடியாத குற்றம் அப்படின்னு எதுவும் இல்லை. அதனால வார்த்தைகளால யாரையுமே பலிக்காதீங்க. வசவுகளால இதயங்களை கிழிக்காதீங்க. நல்லுறவ வன்முறையால இழக்காதீங்க. நட்புகளை இழி மொழியாள தொலைக்காதீங்க. மனிதர்கள் ரத்தமும், சதையும் உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவங்க. யாரையும் தயவு செய்து இகழ்ந்து பேசிடாதீங்க. அவங்களால தாங்கிக்க முடியாது.இது நட்புகளுக்கு மட்டுமல்ல உறவுகளுக்கும் பொருந்தும்.அதனால நாம பார்க்காத நமக்கு பயமில்லாத நல்ல விஷயமும் இல்லாத ஒரு சம்பவத்தையோ விஷயங்களையோ பண்புகளையோ நாம எந்த இடத்திலையுமே பேச தேவையே இல்லை. சரிதானே மாணவர்களே நன்றி.
இரா. சாந்தி
பட்டதாரி ஆசிரியர்(கணிதம்)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
S. பாறைப்பட்டி
தே.கல்லுப்பட்டி ஒன்றியம்
தெய்வநாயகபுரம் (PO)
பேரையூர் தாலுகா
மதுரை மாவட்டம்-625703
Comments
Post a Comment